NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் பல பகுதிகளில் காட்டுத்தீ… !

இலங்கையில் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் ஆறாயிரம் ஹெக்ரயர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், வறட்சி காரணமாக 53774 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 48726 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காடுகளுக்கு தீ மூட்டுதல் மற்றும் விலங்கு வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காடுகளுக்கு தீ வைப்பதனை தடுக்கும் நோக்கில் மக்களை தெளிவூட்டக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles