(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் முதன்முறையாக HIV தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவினால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவு வெளியிட்ட அறிக்கையில் 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் HIV தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 165 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிகபட்சமான தொற்றாளர்களின் எண்ணிக்கை இது எனவும், அதிகமான பதிவுகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டை விட 2022இல் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பானர் வைத்திய கலாநிதி விதானபத்திரன, ‘மாணவர்களுக்கு பாலியல் கல்வியை முறையாக வழங்குவது அவசியம் எனவும், மக்கள் ர்ஐஏ ஐ தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆணுறையைப் பயன்படுத்துவது அவசியம்’ எனவும் தெரிவித்துள்ளார்.