NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் 3000 வீரர்கள் பங்குபற்றும் சீன மரதன் ஓட்டம்!

‘நி ஹாவ் சோங் குவோ’ திட்டத்தின் கீழ் 2000-3000க்கும் மேற்பட்ட சீன விளையாட்டு வீரர்கள் பங்குபற்றும் மரதன் ஓட்டத்தை இலங்கை நடத்தவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் முதல் சீன மரதன் ஓட்டத்தை இலங்கை நடத்தும் என இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவில் உள்ள Chongqing நகரசபைக்கு விஜயம் செய்த ஷிரந்த பீரிஸ், அடுத்த இரண்டு வருட காலப்பகுதியில் மேலதிக சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான Ni Hao Zhong Guo திட்டத்தின் கீழ் உடன்படிக்கையை இறுதி செய்தார்.

அதன்படி, இந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை சீன வீராங்கனைகளுக்கு மரதன் ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles