NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையுடனான தொடரின் தலைவராகும் ஸ்டீவ் ஸ்மித்?

இலங்கை அணியுடன் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆஸி. அணியின் தலைவராக முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 2025 ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வருகிறது.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ICC சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணியுடன் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடவுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஒரு போட்டி கொண்ட ஒருநாள் தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடர் ஜனவரி மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நிறைவடைகிறது. ஒருநாள் போட்டி 13ஆம் திகதி நடைபெறுகிறது. குறித்த டெஸ்ட் தொடரில் ஆஸி. அணியின் தலைவராக ஸ்மித் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸி. அணியின் தலைவரான பேட் கம்மின்ஸூக்கு இலங்கை அணியுடனான தொடரில் ஓய்வு வழங்கப்படவுள்ளதால் இந்த மாற்றம் நிகழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles