NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ‘ஆயிஷா’ பிரித்தானியாவில் நீதிபதியாக நியமனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையில் பிறந்த ஆயிஷா ஸ்மார்ட் என்பவர் அந்நாட்டில் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகளை கையாளும் கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளையர் அல்லாத மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மிகவும் இளைய நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயிஷா ஸ்மார்ட் 14 வயதாக இருந்தபோது பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார்.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஹாரோகேட் மாவட்ட வைத்தியசாலையில் நோயியல் நிபுணராகப் பணியாற்றினார். ஆதனை தொடர்ந்து, லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் ஒரு வழக்கறிஞராக பணிபுரிந்த பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிரித்தானிய உள்ளுர் செய்தி சேவையொன்றுக்கு கருத்து வழங்கியிருந்த ஆயிஷா, இந்த சாதனைக்காக நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கு நியமனம் கிடைத்ததும் எனது அம்மா தனது குடும்பம் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு செல்வது மதிப்பு மிக்கது என்று கூறியது நினைவில் வருகின்றது.

எனது வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு தப்பான எண்ணங்களை எதிர்கொண்ட ஒருவர் என்ற முறையில், எனது நேர்மறையான செய்தி என்னவென்றால், வெள்ளையர் அல்லாதவர்களும் பெண்களும் தங்கள் வெள்ளை அல்லது ஆண் சகாக்களைப் போலவே வெற்றிகரமாக இருக்க முடியும் என்பதுதான்.

நீதிபதிகள் அதிக மூத்தவர்களாக இருக்க வேண்டும், சலுகை பெற்ற பின்னணியில் இருந்து வர வேண்டும் அல்லது ஆக்ஸ்பிரிட்ஜ் செல்ல வேண்டும் என்ற கட்டுக்கதையை அகற்றவும் இந்த நியமனம் உதவுகிறது’ என்று அவர் கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles