இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மட் ஷா 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டுகளையும் அசித்த பெர்ணான்டோ, துனித் வெல்லாலகே மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தநிலையில் 267 எனும் வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க சதம் கடந்து 118 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இது அவருடைய 5 ஆவது ஒருநாள் சதமாகும்.
அதற்கமைய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனும் அடிப்படையில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.