ICC உலக டெஸ்ட் சம்பியஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் விளையாடவுள்ள ஒருநாள் போட்டிக்கான மைதானமாக ஹம்பாந்தோட்டையில் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2023-2025 ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி விளையாடும் இறுதி டெஸ்ட் தொடராக குறித்த இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமையவிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ICC சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணியுடன் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடவுள்ளது.
முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் போட்டிக்கான மைதானமாக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த டெஸ்ட் தொடர் ஐனவரி மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நிறைவடைகிறது. ஒருநாள் போட்டி 13 ஆம் திகதி நடைபெறுகிறது.
குறித்த தெடரில் பங்கேற்கும் அவுஸிதிரேலிய அணி ஐனவரி மாதம் 20 ஆம் திகதி இலங்கை வருகிறது.