இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு விமான சேவை நடவடிக்கைகளுக்குரிய படிமுறைகள் தொடர்பாக இலங்கை அரசும் இத்தாலி அரசும் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தன.
அதற்கமைய இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தமொன்றைக் கையொப்பமிடுவதற்காக 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24அம் திகதியன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும், குறித்த ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடப்படாத நிலையில், துரிதமாக இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது பொருத்தமானதென இருதரப்பினரும் அடையாளங்கண்டுள்ளனர்.
அதற்கமைய, இலங்கை அரசுக்கும் இத்தாலி அரசுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.