இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளை சீர்க்குலைக்கவும், அரசியல் மாற்றங்களை மேற்கொள்ளவும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஊடாக 260 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்திகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரில் உள்ள X கணக்கை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனத்திடம் இருந்து 260 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டு, அதனை இலங்கை, பங்களாதேஷ், யுக்ரைன், சிரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அரசாங்கங்களை மாற்றவும், தனிப்பட்ட ஆதாயத்தைப் பெறவும் பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நடவடிக்கைகளுக்காக கடந்த 15 ஆண்டுகளில், அமெரிக்க முதலீட்டாளரான ஜோர்ஜ் சொரோஸ், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்த அமைப்புகளுக்கு, 270 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.