NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமான சேவை!

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட 5-13-2015 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், விமான சேவை ஒப்பந்தம் இதுவரை கையெழுத்திடப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 

உத்தேச விமான சேவை ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் ஏதாவதொரு இடத்தில் இருந்து கஸகஸ்தான், எஸ்ட்டானா அல்லது அல்மட் வரை முறையான பயண பாதைகளினூடாக வாரதுக்கு 07 விமான முறை சேவைகளை முன்னெடுக்க எதுர்பார்த்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share:

Related Articles