NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை..!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு பயிற்சி சார்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமரவீர அவுஸ்திரேலிய கிரிக்கெட் அல்லது மாநில அல்லது பிரதேச சங்கத்திற்குள் எந்தப் பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிக்பேஷ் லீக் அணிகள் அடங்கிறது.

கிரிக்கெட் விக்டோரியாவில் பணிபுரிந்த சமரவீர ‘தகாத நடத்தையில்’ ஈடுபட்டதாக நடத்தை ஆணையம் கண்டறிந்தது. மாநில மகளிர் திட்டத்துடன் இணைந்து பணியாற்றிய சமரவீரவை தடை செய்வதற்கான முடிவை ஆதரிப்பதாக விக்டோரியா கிரிக்கெட் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

சமரவீர மே மாதம் விக்டோரியன் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், ஆனால் அந்த மாதத்தின் பிற்பகுதியில் அந்த பதவியை முன்னதாக ராஜினாமா செய்தார். சமரவீர கடந்த 2008ஆம் ஆண்டு விக்டோரியா அணியில் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைந்தார். 52 வயதான இவர் 1993 மற்றும் 1995க்கு இடையில் இலங்கைக்காக 7 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ளார்.

Share:

Related Articles