இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராகச் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேர்தலின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உத்தியோகப்பூர்வ முடிவுகளின்படி, ரஜீவ் அமரசூரிய 4,497 வாக்குகளைப் பெற்றார்.
எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் அபேரத்ன 1,667 வாக்குகளைப் பெற்றார்.
ரஜீவ் அமரசூரிய 2,830 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக ரஜீவ் அமரசூரிய அறிவிக்கப்பட்டுள்ளார்.