எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று மாலை தங்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றுள்ளது.
அத்துடன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருள் முன்பதிவுகளை மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளது.
நேற்று மாலை இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்த பிறகு ஜனாதிபதியின் செயலாளர் கணிசமான நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஒன்றையும் நேற்று சமர்ப்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்றைய தினம் எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.