NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளிடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி H.E. Dr Seyyed Ebrahim Raisi ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடருடன் இணைந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு தலைவர்களும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஈரான் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles