NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் நடிகரின் பெயரில் திறக்கப்பட்ட வீதி!

காலஞ்சென்ற இலங்கையின் பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜின் பெயர் வீதி ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது.

தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வீதிக்கே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொடக்காவெல பிரதேச சபையின் அனுமதியுடன் தர்ஷன் தர்மராஜின் பெயர் சூட்டப்பட்ட வீதியின் பெயர் பலகை திறப்பு நிகழ்வு இன்று (27) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தர்ஷன் தர்மராஜின் நண்பர்களின் முயற்சியில் இந்த வீதி திறக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Share:

Related Articles