NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வீரர் யுபுன் அபேகோனின் மேலுமொரு சாதனை!

இலங்கை ஸ்பிரிண்ட் சாம்பியனான யுபுன் அபேகோன் 2023 சீசனுக்கான வெற்றிகரமான முதல் பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

இத்தாலியில் நேற்று நடைபெற்ற ‘FIRENZE SPRINT FESTIVAL’ நிகழ்வில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் கலந்துகொண்டார்.

அநிகழ்வில் யுபுன் அபேகோன் ஐந்தாவது தடத்தில் போட்டியிட்டதுடன் ஆரம்பம் முதலே வெற்றிகரமாக ஓடிய யுபுன் நிகழ்வில் முதலாம் இடத்தைப் பெற்றார்.

ஓட்டப்பந்தயத்தை அவர் 20.60 விநாடிகள் ஓடி முடித்தே அவர் இந்த சாதனையை நிலைநாட்டினார்.

Share:

Related Articles