நாட்டின் இலவச சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அதன் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சார்ல்ஸ் கெலனன் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள், தேவைக்கேற்ப அந்தத் திட்டங்களைத் துரிதப்படுத்துதல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தினால் நாட்டில் உள்ள 30 அரச வைத்தியசாலைகளில் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.