NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளநீர் ஏற்றுமதி ஊடாக வருமானம் ஈட்டும் பாரிய முயற்சி – வருமானம் எவ்வளவு தெரியுமா?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த 2022ஆம் ஆண்டில், 2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தெங்கு தோட்டங்களை விஸ்தரிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உலகில் பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், உலகில் மிகவும் சுவையான இளநீர் இலங்கை இளநீர் என்பதால், இலங்கையில் இளநீரை பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

Share:

Related Articles