நீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்பினராக இருந்து நீக்கப்பட்டவர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு, உடனடியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.