சூரியனின் ஒளியை சந்திரன் மறைப்பதால் சூரிய கிரகணம் தோன்றும். அவ்வகையில் இன்று சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்களால் அவதானிக்க முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேலையிலும் நான்கு நிமிடங்கள் இருள் சூழும் எனவும் தெரிவிக்கப்பட்டுட்டள்ளது .
மிக குறுகிய காலத்தில் இந்நிகழ்வு ஏற்படுவதால் இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் கிரகண பாதையில் விண்கலங்களை ஏவி அவதானிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.