காசா முனை பகுதியை கைப்பற்றி, அங்குள்ள மக்களின் வாழ்வை கட்டுப்படுத்தும் எண்ணமில்லை’ என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவிற்குள் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் செல்வதற்கும், குடிநீர், மின்சாரம், எரிபொருளுக்கும் இஸ்ரேல் கடந்த 2 வாரங்களாக தடை விதித்துள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமலும், காசாவைவிட்டு வெளியேற முடியாமலும் பலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
தரைப்படைத் தாக்குதல்:
இதனிடையே, காசாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தரைப்படையினர் தயார் நிலையில் இருக்குமாறு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் காலண்ட் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகளுடனான மோதலுக்கு பிறகு காசா முனைப் பகுதியை கைப்பற்றும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என நேற்று காலண்ட் தெளிவுபடுத்தியுள்ளார்.
மூன்று கட்டப் போர் : ‘முதலில் வான்வழித் தாக்குதல், தாழ்வாகப் பறந்து விமான தாக்குதல், அடுத்ததாக ஹமாஸ் போராளிகளின் பதுங்குச் சுரங்கங்களை அழித்தல், இறுதியில் காசா முனையின் வாழ்வியலை இஸ்ரேலின் பொறுப்பில் கொண்டுவருவது என மூன்று கட்டங்களாக இந்தப் போர் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.
அதேவேளையில், காசா மக்கள் மீது கட்டுப்பாடு செலுத்தும் திட்டம் எதுவும் இஸ்ரேலுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.