ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் சிலர் மீது அவுஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனியர்களை துன்புறுத்தல் மற்றும் பாலிளயல் வன்கொடுமைகள் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் சிலர் மீது அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தனிநபர்கள் ஏழு பேர் மீதும் ஹில்டாப் யூத் மத குடியேற்றக் குழு மீதும் நிதி மற்றும் பயணத் தடைகளை அறிவித்தார்.அவர் பலஸ்தீனியர்கள் மீது வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டதாக பென்னி வோங் குற்றம் சுமத்தியுள்ளார்.இவர்களின் துன்புறுத்தல்களின் விளைவாக பலர் பலத்த காயமடைந்ததுடன் சில சமயங்களில் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்பெர்ராவின் இந்த அறிவிப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்வுகளை போன்று அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்குறித்த நாடுகளும் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் சிலரை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளன.ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேல் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்பதுடன் அமைதிக்கு தடையாக அமைவதாக வோங் மேலும் தெரிவித்துள்ளார்.