NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலிய பிரஜைகளுக்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ என்பவரை 071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்த விடயங்களுக்காக உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles