NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேலிய யுவதியொருவரை கடத்தி கப்பம் பெற முயன்ற இலங்கையர்!

இஸ்ரேலிய யுவதியொருவரை கடத்தி கப்பம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து இஸ்ரேலில் சட்டவிரோதமாக குடியேறிய நபருக்கு எதிராகவே , இளம் பெண்ணை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்ததாக இஸ்ரேலிய அரச தரப்பு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து பல வருடங்களாக இஸ்ரேலில் வாழ்ந்து, இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமான முறையில் வேலை பார்த்த இலங்கை பிரஜை என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.

ஏப்ரல் 2021 இல், சமிந்த இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜோர்டான் எல்லையில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் மீண்டும் நுழைந்து அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது இஸ்ரேலிய நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles