NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் 330 பலஸ்தீனியர்கள் கைது !

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 330 பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அவர்களில் 190 பேர் ஹமாஸ் போராளிகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles