ஈஸ்டர் 21 தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களின் உண்மைத் தன்மையை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று (25) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த பேரணியை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.