NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஈ பில்லிங்’ சேவையை பதிவு செய்யுமாறு கோரிக்கை!

மின்சார பாவனையாளர்களுக்காக அமுல்படுத்தப்படும் ‘ஈ பில்லிங்’ சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணையத்தளமான http://ebill.ceb.lk ஊடாக வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் எனவும் இல்லையெனில் 1987 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்ய முடியும் எனவும் சபை குறிப்பிடுகிறது.

வாடிக்கையாளர் தனது தொலைபேசி எண்ணில் உள்ள REG இடத்தையும், மின் கணக்கு எண்ணையும் ஒரு இடைவெளியாகக் குறிப்பிட்டு 1987 க்கு SMS  (EBILL(Space) CEB Account No (Space) Emaill Address and send 1987) அனுப்ப வேண்டும்.

தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு ஏற்கனவே ‘ஈ-பில்கள்’ வழங்கப்பட்டு வருவதுடன், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் இந்த சேவை அமுல்படுத்தப்பட உள்ளது.

Share:

Related Articles