உடனடியாக போரை நிறுத்தி அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என பொப் பிரான்சிஸ் காசாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பண்டிகை விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ காசாவிற்கு மனிதாபிமான ரீதியிலான உதவிக்கு அணுகலை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
மேலும், உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன். இதனால், குழந்தைகளின் கண்களில் நாம் எவ்வளவு துன்பங்களை காண்கிறோம்.
அந்த போர்க்களங்களில் குழந்தைகள் புன்னகைக்க மறந்துவிட்டார்கள். இது வருத்ததிற்குரிய விடயமாகும். எனவே போரை நிறுத்துமாறு நான் காசாவிற்கு அழைப்பு விடுக்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.







