16 வகையான பூச்சிகள் மனித நுகர்வுக்கு பாதுகாப்பென சிங்கப்பூர் உணவு நிறுவனம் தரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புழுக்கள், அந்துப்பூச்சி மற்றும் ஒருவகை தேனீ உள்ளிட்ட சில பூச்சிகள் இந்தப் பட்டியலில் அடங்குகின்றன.
சிங்கப்பூரில் பூச்சிகள் ஒரு புதிய உணவுப் பொருளாக இருப்பதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 128 நாடுகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இவ்வாண்டு அறிவியல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் 2,205 பூச்சி இனங்கள் உட்கொள்ளப்படுகின்றன. இவ்வினங்களில் பெரும்பாலானவை ஆசிய நாடுகளில் காணப்படுவதுடன், அதைத் தொடர்ந்து மெக்ஸிகோ மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.