(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தை உணவு தொண்டையில் சிக்கியமையால் உயிரிழந்துள்ளது.
தாய்க்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் இச்சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் மதிய உணவு தயாரித்து குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் போது மேற்படி தாய்க்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் தொண்டையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு சிக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் தாய் நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.