NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை!

தேவைக்கு அதிகமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறு ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தன திலக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து மொத்தமாக உப்பை வீடுகளுக்கு கொண்டு சென்று சேமித்து வைத்துக்கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவராக நேற்றுஅவர் பதவியேற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 400 கிராம் உப்பு தூள் மற்றும் 1 கிலோ கல் உப்பு 2 பக்கட்டுக்கள் போதுமானது. எனினும், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தேவையற்ற அச்சம் காரணமாக உப்பினை சேகரிப்பதை தவிர்க்குமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்திடம் தற்போது 6,000 மெற்றிக் தொன் உப்பு இருப்பதாகவும், அது ஜனவரி மாதம் வரை போதுமானது என்றும் அவர் கூறினார்.

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles