NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தரப் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்…!

எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களில் உயர்தரத்துக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி  வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,298 பரீட்சை  நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles