க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைவாக, உயர்தரப் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், க.பொ.த சாதாரண தரம் நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தரக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகிறது.