NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிரை காத்துக்கொள்ள கப்பம் வழங்கிய ஜனக்க!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் திட்டமிட்ட குற்றச்செயல்களை புரியும் நபரொருவர் 15 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்ட குற்றச்செயல்களை புரியும் நபரான புளுமெண்டல் சங்கா என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபரொருவரே 15 இலட்ச ரூபாவை கப்பமாக பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் கோடீஸ்வர வர்த்தகரான ஜனக்க ரத்நாயக்கவை கொலை செய்ய ஒப்பந்தம் ஒன்று வந்துள்ளதாகவும் அதற்காக 80 இலட்ச ரூபா பணம் தருவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்ததுடன், ஜனக்கவை கொலை செய்யாதிருக்க தனக்கு 15 இலட்ச ரூபா தரவேண்டுமெனவும் ஜனக்க ரத்நாயக்கவிடம் தொலைபேசி அழைப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொலைபேசி அழைப்பினை அடுத்து ஜனக ரத்நாயக்க தனது அலுவலகத்தில் உள்ள பணத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவை தன்னை அழைத்த நபரிடம் ஒப்படைக்குமாறு அவரது அலுவலக பணியாளருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளதாகவும் இத தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கொழும்பு பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles