NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக்கோப்பை 2023’ஐ தன்வசப்படுத்தியது அவுஸ்திரேலியா!


UPDATE:  உலகக்கோப்பை 2023’ஐ
அவுஸ்திரேலிய அணி இம்முறை தனதாக்கிக் கொண்டுள்ளது. 43 ஓவரில் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் 241 ரன்களை பெற்று 6ஆவது முறையாக உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.

UPDATE: டிராவிஸ் ஹெட் 100 ரன்களை பெற்று சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒரு நாள் சர்வதேச போட்டிகளில்  இவர் பெற்ற 5ஆவது சதமாகும்.

UPDATE: அவுஸ்திரேலிய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 107 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

UPDATE: முகமது ஷமி 6 ரன்னில் அவுட்: இந்தியா 211/7 (43.4).

UPDATE: கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். 207 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்.

UPDATE: இந்திய அணி 41 ஓவரில் 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து உள்ளது.

UPDATE: கே.எல்.ராகுல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதேவேளை, ஜடேஜாவின் ஆட்டமிழப்புடன் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 178 ஓட்டங்களை இதுவரை பெற்றுள்ளது.

UPDATE: விராட் கோலி 54 ரன்னில் தோல்வி – இந்தியா 149/4 (29).

13ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோகித் ஷர்மா 31 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.

தற்போது 20 ஓவரில் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி ஆடி வருகிறது.

Share:

Related Articles