NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ணத்திற்கு மேல் கால்களை வைத்த Mitchell Marsh – வெடித்தது சர்ச்சை!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 6வது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்த அவுஸ்திரேலிய அணிக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் கிண்ணத்தை கையளித்தார்.

இவ்வாறு கிண்ணத்தை பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய அணி, வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி வீரர் Mitchell Marsh, கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு மேல் கால்களை வைத்திருப்பதை போன்றதொரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

நாற்காலியில் அமர்ந்தவாறு குளிர்பானமொன்றை அருந்திக் கொண்டு, உலகக் கிண்ணத்திற்கு மேல் தனது கால்களை Mitchell Marsh வைத்திருப்பது போல் உள்ள குறித்த புகைப்படம் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பாரிய விமர்சனங்களை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles