உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடர் தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மேலும், இந்தத் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் கலந்துகொள்ளவுள்ளது.
அதன்படி, இலங்கை அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் அனுபவ வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பெற்றுள்ளதுடன், இம்முறையும் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முக்கிய வீராங்கனையாக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய வலைப்பந்து சம்மேளனம் உலகக்கிண்ணத் தொடருக்காக ஏற்கனவே 20 பேர் கொண்ட முதற்கட்ட குழாம் ஒன்றை அறிவித்து பயிற்சிகளை நடத்திவந்ததுடன், அதனைத்தொடர்ந்து அணி 16 வீராங்கனைகளாக மட்டுப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் தருஷி நவோத்யா பெரேரா மாத்திரம் நீக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியின் ஏனைய வீராங்கனைகள் அனைவரும் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர்.
மேலும், இந்த உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் தலைவியாக கயாஞ்சலி அமரவன்ச செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வலைப்பந்தாட்ட அணி
திசால அலகம, செமினி அல்விஸ், சானிக பெரேரா, இமாஷா பெரேரா, கயான்ஜலி அமரவன்ச, ரஷ்மி திவ்யாஞ்சலி, ருக்சலா ஹப்புவராச்சி, சாமுதி விக்ரமரட்ன, துலங்கி வன்னித்திலக்க, மல்மி ஹெட்டியராச்சி, கயானி திஸாநாயக்க, சத்துரங்கி ஜயசூரிய, காயத்ரி கெளசல்யா, தர்ஜினி சிவலிங்கம், பாஷினி யோசித டி சில்வா