NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கோப்பை கிரிக்கெட் – தொடக்க விழா இரத்து!

இந்தியாவில் நாளை தொடங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவை இரத்து செய்ய இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

இன்று (04) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்ப விழா நடைபெறுவதாக இருந்தது.

இந்த முடிவுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ அரம்ப விழா இல்லாமல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

எனினும், உலகக் கோப்பையில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் நரேந்திர மோடி மைதானத்தில் ஊடகங்கள் முன் கருத்துகளை தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Share:

Related Articles