(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலகின் பிரபல பொப் இசை பாடகி மெடோனா, பக்டீரியா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தற்போது அமெரிக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடகி மெடோனாவுக்கு தற்போது 64 வயதாகிறது.
அவர் சுவாசிப்பதில் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.