NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கை..

Sapien Labsஇன் 2023ஆம் ஆண்டுக்கான உலக மனநிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான துன்பகரமான நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

89 மதிப்பெண்களுடன் மனநலக் கோட்டத்தில் இலங்கை உலகின் 2ஆவது மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது.

இந்தப் பட்டியலில் டொமினிகன் குடியரசு முன்னணியில் உள்ளது. டான்சானியா, பனாமா, மலேசியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.

இலங்கையின் சனத்தொகையில் 14 சதவீதம் பேர் மட்டுமே உலகளவில் மிகக் குறைவான மன உளைச்சலுக்கு ஆளாவதாக அல்லது போராடுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின்படி, இது பிரேஸில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. அங்கு 35 சதவீதம் வரை மனநல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

Share:

Related Articles