NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!

உலகின் மிக வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ‘பாபி’ உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘பாபி’ கடந்த 22ஆம் திகதி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. பாபி இறக்கும் போது அதற்கு 31 வயதாகும். ஒரு நாயின் சராசரி ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

‘பாபி’ போர்த்துகீசிய ‘ராஃபெரியோ டோ அலென்டெஜோ’ இனத்தை சேர்ந்ததாகும்,

விலங்குகள் வைத்திவைசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ‘பாபி’ உயிரிழந்ததாக ‘பாபி’ படத்தின் உரிமையாளர் லியோனல் கோஸ்டா ஊடகங்களுக்கு உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.

Share:

Related Articles