NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகில் பறவைக் காய்ச்சலால் பதிவான முதலாவது மரணம்

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மெக்சிக்கோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸின் வெளிப்பாடு தற்போது அறியப்படவில்லை என்றாலும், மெக்சிக்கோவில் உள்ள கோழிகளில் A(H5N2) வைரஸ்கள் பதிவாகியுள்ளன” என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles