NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக்கிண்ண ஆண்கள் தொடரில் இடம்பிடித்த இலங்கை வீரர்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆண்களுக்கான அணியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க, இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.

நடந்து முடிந்த 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தெரிவு செய்து இந்த Team of the Tournament அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தனது முதலாவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இம்முறை விளையாடிய டில்ஷான் மதுஷங்க, 9 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

இந்த அணியில் இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 6 வீரர்களும், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளிலிருந்து தலா இரண்டு வீரர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

குறித்த அணி பின்வருமாறு…

The team of the ICC Men’s World Cup 2023 (in batting order) is: 

  1. Quinton de Kock (wk) (South Africa) – 594 runs at 59.40
  2. Rohit Sharma (c) (India) – 597 runs at 54.27
  3. Virat Kohli (India) – 765 runs at 95.62
  4. Daryl Mitchell (New Zealand) – 552 runs at 69
  5. KL Rahul (India) – 452 runs at 75.33
  6. Glenn Maxwell (Australia) – 400 runs at 66.66 and six wickets at 55
  7. Ravindra Jadeja (India) – 120 runs at 40 and 16 wickets at 24.87
  8. Jasprit Bumrah (India) – 20 wickets at 18.65
  9. Dilshan Madushanka (Sri Lanka) – 21 wickets at 25
  10. Adam Zampa (Australia) – 23 wickets at 22.39
  11. Mohammed Shami (India) – 24 wickets at 10.70
  12. 12th player: Gerald Coetzee (South Africa) – 20 wickets at 19.80
Share:

Related Articles