NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கிண்ண தொடரில் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்!

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இதில் நேற்று இடம்பெற்ற ஒரு லீக் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 344 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து 345 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷாபீக் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் சதத்தால் 48.2 ஓவரில் 345 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதாவது, 50 ஓவர் உலக கிண்ண வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த அணி என்ற புதிய சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

Share:

Related Articles