NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்து அணி அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் October 5 முதல் November 19 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.

உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (தலைவர்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.

Share:

Related Articles