NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் இருந்து தமது தடுப்பூசியை திரும்பப்பெறும் AstraZeneca

உலகம் முழுவதும் உள்ள சந்தைகளிலிருந்து ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா (Oxford-AstraZeneca Covid) தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நிறுவனம், நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ள நிலையிலேயே நேற்று (08) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிறுவனம் தானாக முன்வந்து அதன் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றதன் பின், தடுப்பூசியை இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) பயன்படுத்த முடியாது.

முன்னதாக தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 05ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் திரும்பப்பெறும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

எனினும், வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசி சந்தைகளில் இருந்து அகற்றப்படுவதாக அஸ்ட்ராசெனெகா தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொற்றுநோய்க்குப் பின்னர் கிடைக்கக்கூடிய புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளின் உபரி காரணமாகவே தமது தடுப்பூசிகளை உலகளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், அஸ்ட்ராசெனெகா மீது 50இற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது இரத்த உறைவு மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்தலை இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles