NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!

வருடாந்த மொத்த வருமானம் 12 இலட்சம் ரூபாவை விடவும் அதிகரிக்குமாயின் வருமான வரி கோப்பைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது.

தமது திணைக்களத்தின் இரண்டாம் மாடியில் உள்ள பதிவு செய்தல் பிரிவுக்கு பிரவேசித்தோ அல்லது இணையத்தள சேவைகள் ஊடாகவோ, வருமான வரி கோப்பைத் திறக்க முடியும் என அறிக்கை ஒன்றின் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தள சேவைகளுக்காக www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, வருமான வரி கோப்பைத் திறக்க முடியும்.

அதேநேரம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களிலும், வருமான வரி கோப்பைத் திறப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles