NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் : SLC அறிவிப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மேன்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்து மூலமான அறிவுறுத்தல்களை ஒகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கியுள்ளதாக, ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், வாரியத்தால் நடத்தப்படும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும், அதுகுறித்து விளக்கம் பெறும் வரை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles