NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்நாட்டு டயர் விலையைக் குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்!

உள்நாட்டு டயர் ஒன்றின் விலையைக் குறைக்க உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் நேற்று (31) வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியதாக அமைச்சர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் இருந்த போதிலும், டயர்களை இறக்குமதி செய்வதன் மூலம் பாரியளவில் அந்நிய செலாவணியை நாடு இழந்துள்ளதாக டயர் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

எதிர்காலத்தில் தேவைக்கு அதிகமாக டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles