NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் வழங்குகின்றதுடன், புதிய வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய நோக்கத்துடன் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அண்மையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles